பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

10. நினைத்தது நடந்தது

9 பாடல் எழுதும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று, அவற்றை செய்து முடிப்பதற்காக, சென்னைக்குப் பலமுறை வர நேர்ந்தது. சிரமங்கள் பல என்றாலும் அவற்றை சிரமமாக நினைக்காமல், சாதனைக் குரிய கருமமாக கருதி வந்தாலும், வேலை எதுவும் நடக்கவில்லை. நடந்ததாக நினைத்து மகிழவும் முடியவில்லை.

அதனால், சென்னையில் தங்கிக் கொண்டு, சினிமா முயற்சியைத் தொடர வேண்டும் என்று உறுதி செய்து கொண்டேன். வேலையில்லாமல் அதே முயற்சிகள் என்றால், பட்டினிதான் பரிசு, பரிதாபம் தான் துணை என்று, அனுபவப்பட்ட பலர் என்னிடம் பேசினார்கள். அவர்கள் வாழும் முறையை நேரில் பார்த்துத் தெரிந்த கொண்ட பிறகு, முழுநேர முயற்சி சரிவராது என்று, ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலையை ஏற்றுக்கொண்டேன்.

சென்னையில், மயிலாப்பூரில் உள்ள வித்யாமந்திர் என்கிற சிறந்த பள்ளியில், உடற்கல்வி இயக்குநர் பணிக்கு, அழைப்பை ஏற்றுக்கொண்டு, காரைக்குடி நோக்கிச் சென்றேன். கல்லூரி வேலையை ராஜினாமா செய்ய,

கல்லூரியில் உத்தியோகம் என்றால் கெளரவம்