பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

மிகுந்ததல்லவா ! எனக்கு எதிர்ப்புகள் நிறைய வந்தன. இல்லாததற்கு ஏங்கி, இருக்கிறதை கைவிடுகிற மடையன் போல ஆகி விடாதே என்று, என்னிலும் வயது, அறிவு, அனுபவம் உள்ள ஆசிரியர்கள், அறிவுரை தந்தார்கள். சிலர் செல்லமாகத் திட்டியும் பார்த்தார்கள்.

விதி என்னை விரட்டுகிற போது, மதி என்ன செய்யும் ? மயங்கிக் கொண்டது. துணிந்து என் கல்லூரிப் பணியை ராஜினாமா செய்தேன். மூன்று மாத நோட்டீஸ் தரவேண்டும் என்பது முறை. தைரியமாக, துணிந்து, ராஜினாமா கடிதத்தைத் தந்துவிட்டேன்.

ஜூலை மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதம் முடிய மூன்று மாதங்கள், செப்டம்பர் 30 ந் தேதி வேலையிலிருந்து விடுபட்டேன். சம்பளம் கேட்டதற்கு, கணக்கை முடித்து அனுப்புகிறோம் என்று கல்லூரி நிர்வாகம் கூறிவிட்டது.

கையில் இருந்தது 10 ரூபாய் தான், மறுநாள் காலை நான் சென்னையில் உள்ள பள்ளியில், வேலையில் சேர்ந்தாக வேண்டும். என்ன செய்வது? ஊரைவிட்டுப் போகிற ஆளுக்கு, யார் நம்பி கடன் தருவார்கள்! *

கடன் கொடுத்துப் பழகிய எனக்கு, கடன் கேட்க, வாங்க மனமில்லை. அதனால், இருந்த 10 ரூபாயுடன், என்னிடம் உள்ள துணிச்சலுடன், சென்னை நோக்கிப் பயணமானேன். அப்பொழுது சென்னைக்கும் காரைக்குடிக்கும் டிக்கட் ரூ 7.50 தான். மிகுந்த நம் பிக்கையுடன், ஏராளமான எதிர்பார்ப்புகளுடன், மீதமுள்ள இரண்டரை ரூபாயுடன், இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் பயணமானேன்.

நீங்கள் விரைவில், இருக்கும் வேலையை விட்டு விட்டு, வேறிடம் செல் வீர்கள் என்று சொன்ன, முகம் தெரியாத ஜோசியனையும் நினைத்துக் கொண்டேன்.