பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

தெய்வம் மனிதர்கள் மூலமாக உதவுகிறது. தெய்வத் திருவருள் எப்படி வரும் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் , தேவை யானபோது, தேவையானதை, உண்மையானவர்களுக்கு தெய்வம் தேடி வந்து தரும் என்பார்களே அது என் வாழ்க்கையில் நடந்தது.

இரண்டு படுக் கையறைகள் கொண்ட வீடு, கட்டில், மெத்தை, போன் போன்ற சகல வசதிகள் கொண்ட அந்த மேதை இருந்த இடத்தில், என்னையும் தங்குவதற்கு அனுமதி அளித்த,

அந்தத் தங்க மனிதர் சேஷாத்திரி அவர்கள் என் வாழ்க்கையின் துருவ நட்சத்திரம் என்றால், உண்மைதான்.

எனக்கு அந்த வீடு கிடைத்தது என்ற வுடன், எனக்கு இருந்த மரியாதை, மற்ற ஆசிரியர்களிடையே உயர்ந்து கொண்டது.

வித் யா மந்திர் பள்ளியைப் பற்றி நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

பள்ளி மாணவர்கள் எல்லோரும் ைப யன்கள், படிப் பித்துத் தரும் ஆசிரியர்கள் எல்லோரும் பெண்கள். ஒவியம், விளையாட்டு, இந்தி, சமஸ் கிருதம் , தமிழ் இந்த பாடங்களுக்கு மட்டுமே ஆண்கள். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியைகள்.

ஆசிரியைகளில் பெரும்பாலானவர்கள், நல்ல வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆசிரியத் தொழிலை புனிதமாகக்

கருதியவர்கள், சம்பளத்தை இரண்டாம் பட்சமாக நினைத்தவர்கள்.

அறிவுக்கும் திறமைக் கும் நிறைய மதிப் பு

கொடுப்பவர்கள். என்னை, ஏதோ ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்றுதான் முதலில் நினைத்தார்கள். பள்ளி தலைமை