பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

ஆசிரியையும், தாளாளர், மற்றும் நிர்வாக இயக் குனர் அவர்களும் சேர்ந்து கொண்டு எனக்கு வீடு கொடுத்து உதவியதை, அவர்களால் முதலில் நம்ப முடியவில்லை. என்னை அறிந்து கொள்ள ஆரம்பித்தார்கள், பள்ளியில் நான் பணியாற்றும் முறைகளை கண்காணிக்க ஆரம் பித்தனர்.

எதுவும் தெரியாமல், வீடு கிடைத்த மகிழ்ச்சியில், நான் பெற்ற திகைப்பு தீராத நிலையில் நடமாடிக் கொண்டிருந்தேன். விளையாட்டில் நான் கெட்டிக்காரன் என்றால், அது அவ்வளவு ஒன்றும் பெரிதல்ல அவர்களுக்கு. தமிழ் இலக்கியத்தில் எனக்கு இருந்த ஈடுபாட்டை அவர்கள் அறிந்து கொள்கிற ஒரு சூழ்நிலை அமைந்தது. அதன் பிறகு தான், என் அறிவும், சிந்தனையும் விழித்துக் கொள்ளத் தொடங்கின. அந்த சந்தர்ப்பத்தை இன்றும் நான் வியப்போடு சிந்தித்துக் கொண்டே வாழ்கிறேன்.