பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 89

செய்திருக்கிறோம். உங்களுக்குக் கவிதை எழுதத் தெரியும் என்று நீலா கூறினாள். எப்பொழுது எழுதித் தருவீர்கள்’ என்று கேட்டார்கள். நீலாவின் புன்னகையின் மர்மம் புரிந்துவிட்டது, என்னுடைய தமிழறிவை சோதித்து வெளிப்படுத்த, இந்த சிக்கலை ஏற்படுத்தி விட்டார்கள்.

எப்பொழுது என்ன? இப்பொழுதே எழுதித் தருகிறேன். காட்சியை நீங்கள் தேர்வு செய்து விட்டீர்களா என்று கேட்டேன்.

குகப்படலம் என்றனர் ஒரே குரலில் பலர்.

முன்கூட்டியே பேசி எடுத்த முடிவு.

நான் சொல்லிக் கொண்டே வருகிறேன் யாராவது எழுதிக்

கொள்ளுங்கள் என்றேன். சர்வ சாதாரணமாக,

வியப்பில் விழிகளை ஏற்றி இறக்கினார்கள் எல்லோரும். ஒரு ஆசிரியை பேப்பரும் கையுமாக உட்கார்ந்து கொண்டார். எழுதுங்கள் என்று நான் பாடலை சொல்ல ஆரம்பித்தேன்.

தாயின் சொல் கேட்ட

தந்தையின் சொல் கேட்டு

நாயகன் இராமனும்

நடந்தான் நாடுவிட்டு

என்று நான் தொடங்கியதுமே, அப்படியே திகைத்துப்

போனார்கள் எல்லோரும்.

உடற்கல்வி ஆசிரியர் என்று நினைத்து ஏதோ கேட்கப் போய், இராமாயணம் பாடுகிறாரே. இப்படி பாடுகிறாரே! வியப்போடு நோக்கினார்கள்.

கணவன் இருக்குமிடம்

கைலாசம் என்றதனால்

துணைவன் நிழல்போல

தொடர்ந்தாள் சீதையும் .....