பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

டாக்டர் எளில், நவராஜ் செல்லையா

என்று அடுத்த அடியைப் பாடினேன். -

அண்ணன் திருவடிக்கு

ஆயிரம் பணி செய்ய

சின்னவன் இலக்குவனும்

சேர்ந்தான் அவரோடே......

இப்படி நான் தொடர்ந்து 100 வரிகளுக்கு மேல் பாடினேன். எப்படிப் பாடினேன் நான், என்று அப்பொழுது ஆச்சரியப்பட்டேன். இப்பொழுதும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றும் அந்த ஆச்சரியத்திற்குப் பதிலே கிடைக்கவில்லை. ஆண்டவனின் அனு கிரகம் அது என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.

குகப் படலத்தை நாட்டிய நாடகமாக எழுதிய விதம், எல்லோருக்கும் பிடித்திருந்தது. என் தமிழ் அறிவை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அந்த ஆண்டு விழாவில், இராமயண நாட்டிய நாடகம், பெற்றோர்கள் போற்றும் விதத்தில் பெரும் சிறப்பாக நடந்தேறியது. இல்லை! என்வாழ்க்கையின் உயர்வு. அங்கே அரங்கேறி ஆரம்பமானது என்றே கூறலாம்.

ஏன் இந்த நிகழ்ச்சியை இவ் வளவு விரிவாக இங்கே எழுதுகிறேன் என்றால், இந்த நிகழ்ச்சி தான், எனது இன்றைய முன்னேற்றத்திற்கு முதன் முதல் கால் கோளாக அமைந்திருந்தது.

எனக்குப் பள்ளி ஆசிரியைகள் மத்தியிலே ஒரு நல்ல மரியாதையை ஏற்படுத்தித் தந்தது. அகில இந்திய வானொலியில் (சென்னை) என்னை அறிமுகப்படுத்தி வைத்தது. தியாகபூமி என்ற பத்திரிகையில் தொடர்ந்து எழுதுகிற வாய்ப்புகளை வழங்கியது. என் எதிர்கால முயற்சிகளுக்கெல்லாம் நிறைய ஆதரவை பெற்று தந்தது இந்த நிகழ்ச்சி தான் என்றால் என்னால் எப்படி மறக்க முடியும்?