பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 | விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

12. வியப்பும், மலைப்பும்

97uruar ஒரு முறை படித்து விட்டால், அதன் தமிழ் ஆக்கமானது படித்தவரைப் பற்றிக்கொள்ளும் என்றெல்லாம் தமிழறிஞர்கள் பேசுவார்கள்.

அவர்கள் கூற்றினை நம்பிய நானும், நேரம் கிடைக்கிற பொழுதெல்லாம், இராமாயணக் கவிதைகளைப் படித்துப் படித்து, கம்பரின் கவி நயங்களை ரசித்துப் புசித்துக் கொள்வதும் உண்டு.

அப் படி இருந்ததால் தான் , என்னால் ஒரு நல்ல இராமாயண நாடகத் தை, விரைவாக எழுத முடிந்தது. எழுதியதால் எனக்கு எந்தப் பரிசும் கிடைத்துவிடவில்லை. ஆனால் என் எதிர்கால இலட்சியத்திற்கு, இந்த நாடகமே, வழிகாட்டியாக அமைந்து கொண்டது.

நான் எழுதிய பாடல்களுக்கு, இசை அமைக்கும்படி, ஒரு பெண்மணியிடம் தலைமை ஆசிரியை தந்திருந்தார்கள். எங்கள் எல்லா ஆசிரியர்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்ட இசையரசி அவர்கள்.

ஒரு பி. டி. மாஸ்டர் எழுதிய பாடல்கள் என்று அவரிடம் தந்து, இசை அமைக்கும்படி கேட்ட போது, அலட்சியமாக வாங்கி, அவசரமாக தன் கைப் பை யில் வைத்துக்