பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

அழைப்பு என்னை வரவேற்றது. மகிழ்ச்சி யுடன், வணக்கம் செய்தபடி உள்ளே நுழைந்தேன். உட்காருங்கள் என்றார். உட்கார்ந்தேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.

மிகுந்த நம்பிக்கையுடன், நுனி நாற்காலியில் அமர்ந்திருந்தேன். நீங்கள் பெரிய கவிஞரோ என்று அய்யாசாமி ஆரம்பித்தார். அப்படியொன்றும் இல்லை. கவிதை எழுதுவேன் என்றேன்.

டெல்லியிலிருந்து சிபாரிசு செய்தால், நீங்கள் பெரிய கவிஞர் ஆகி விடுவீர்களோ உங்களுக்கு யாப்பு தெரியுமா என்றார் கேலியாக,

நான் தமிழ் எம். ஏ என்றேன்.

தமிழ் எம்.ஏ என்றால் பெரிய கொம்பா? என்று முழங்கி, என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டார். ஏன் இங்கே வந்தேன் என்று என்னை நானே நொந்து கொள்ளும் படி நிலைமை ஆகிவிட்டது.

என்னிடம் நேரே வந்திருந்தால் இரக்கப்பட்டு, ஒரு வாய்ப்பு தந்திருப்பேன் இப்படி சிபாரிசு பிடித்துக் கொண்டு வந்தால், வாய்ப்பு கிடைக்கும் என்று, இனிமேலாவது மனப்பால் குடிக்காமல் இரு என்றார் மிகவும் ஆத்திரப் பட்டு.

நானே டெல்லிக்குப் போய், சிபாரிசு கடிதம் வாங்கி

வந்ததாக, அவர் தவறுதலாக நினைத்துக் கொண்டார் போலும்.

அவர் படுத்திய அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். அவர் என்னை பேசிய விதத்தை, என்னை இகழ்ச்சியாகப் பேசியதை சகித்துக் கொள்ள முடியவில்லை.

நான் எழுந்து நின்று கொண்டேன்.