இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திறமையே பெருமை தரும்!
ஏழை பணக்காரன், ஆண்டான் அடிமை, சாதி சமயம் போன்ற ஏற்றத்தாழ்வுகள் விளையாட்டு உலகத்தில் எனறும் தலைகாட்டுவதில்லை. தலைகாட்ட ஆரம்பித்தாலும், அவ்வப்போது அவை அடிபட்டே போகின்றன. அவமானப்பட்டே திரும்பியிருக்கின்றன.
திறமையுள்ளவனை விளையாட்டு உலகம் ஏற்றுக் கொள்கிறது, பாராட்டி பரிசளித்துத் தன்னையும் பெருமைப்படுத்திக் கொள்கிறது என்பதே உண்மை யாகும்.
'அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்' என்பது புறநானூற்றுப் பாடல். 'திறமையால் ஒருவனை