18 விளையாட்டு அமுதம் ஆட்டம் ஆடப்பட்டு வந்தது. அதற்கென்று அனைத்து. இங்கிலாந்து சங்கம் ஒன்று உருவாகி இருந்தது. அதன் உறுப்பினர்களில் மிகவும் ஆர்வம் கிறைந்தவர் ஒருவர். அவரது பெயர் ஜே. டபிள்யூ வால்ஷ் என்ப தாகும். தனது மகளை அந்தச் சங்கத்தின் ஆயுட்கால அங்கத்தினராக சேர்த்துக்கொண்டால், அந்த சங்கத் திற்கு ஒரு இரும்புருளை (Iron roller) பரிசளிப்பதாகத் தெரிவித்தாராம். அந்த ஏற்பாடும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. இரும்புருளையும் பரிசளிக்கப்பட்ட ஆ) : - 1875ஆம் ஆண்டு அந்த சங்கத்தில் புதியதாக, டென்னிஸ் ஆட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குக் காரணமாக அமைந்தவர் ஹென்றி ஜோன்ஸ் என்பவர். ஆட்டம் ஆடப்பெற்று வந்தபோது, தரையை சமப்படுத்த உதவும் அந்த இரும்புருளை யானது பழுதாகிப் போய்விட்டது. பழுதாகிப்போன இரும்புருளையை ரிப்பேர் செய் வதற்குப் பணம் வேண்டுமே! அதற்கு ஒரு அரிய யோசனையை இரும்புருளை தந்த வால்ஷ் கூறினராம். அதாவது ரிப்பேர் செய்வதற்கான பணத்தைத் திரட்ட, டென்னிஸ் போட்டி ஒன்று நடத்தினுல் என்ன? என்பதுதான். அந்த அடிப்படையில் 1877ம் ஆண்டு, விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடத்தப்பெற்றது. அதுவே இன்று. ஆல் போல் வளர்ந்து அகிலத்திற்கே உரிய போட்டி யாக மாறி வந்து விட்டது.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/11
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை