20 விளையாட்டு அமுதம் ஆடம்பரமான அரண்மனையில் அரச போகத்தில் வாழ்ந்தாலும், ஆற்றல் இல்லாத தேகமுடையவர்கள் அணுவளவேனும் Փ-- 6Ն) Ց5 வாழ்க்கையை ரசிக்க முடியாது, ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது என்பதை அறிந்து, ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் பெற்ற இளவரசனின் ஆர்வம்தான் என்னே ! உடலை வைத்துத் தானே உலக வாழ்க்கை ! ஆர்வமுடன் உடல் ஆற்றலை வளர்த்துக் கொள்ள நாமும் முயலலாமே ! நாம் ஏன் தோற்கிருேம்? 1936ஆம் ஆண்டுதான், கூடைப் பந்தாட்டம் ஒலிம்பிக் பந்தய விளையாட்டாக சேர்க்கப்பட்டது. அக்காளிலிருந்து 1968ஆம் ஆண்டுவரை அமெரிக்காவே வெற்றி பெற்று வந்தது. புகழில் சிறந்தது. 1972 மியூனிக் ஒலிம்பிக்கில், அமெரிக்கா ரஷ்யா விடம் முதல் முறையாகத் தோற்றது. ஆல்ை 1976ஆம் ஆண்டு, மான்ட்ரியல் ஒலிம்பிக்கில் அமெரிக்கா வென்று, ரஷ்யா தோற்று மூன்ருவது இடத்தை அடைந்தது. 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடக்கும் ஒலிம்பிக் பந்தயத்தில் கூடைப் பந்தாட்டத்தில் ரஷ்யா வெல்ல வேண்டும் என்பதில் மிகவும் குறிப்பாக இருக்கிறது. 1976 ஆம் ஆண்டு ரஷ்யா ஏன் தோற்றது என்பதற்குப் பலர் ஆராய்ச்சி செய்தனர். அவர்கள் கூறிய கருத்தான து, 1972ஆம் ஆண்டில் பங்குபெற்ற விளையாட்டு வீரர்களை முழுதும் நம்பியே இருந்ததும், புதிய
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/13
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை