பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 23 திருத்திக் கொள்ளும் தருணம் வந்துவிட்டது. கம் திறமையை வளர்த்துக் கொள்ள முயல்வோம். அப்பொழுதுதான் புகழும் உயரும். பெருமையும் வளரும். இரண்ரு கைகள் போதுமோ? 1982ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் எனும் நகரத்தில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன. இந்திய நாட்டி லிருந்து வளைகோல் பந்தாட்டக் (Hockey) குழுவினர் விளையாடப் போயிருந்தார்கள். ஏற்கனவே (1928ஆம் ஆண்டு) முதல் தடவையாக ஒலிம்பிக் பந்தயத்தில் வளைகோல் பந்தாட்டத்தில் வெற்றி வீரர்களாகத் திகழ்ந்திருந்ததால், நமது இந்திய காட்டு வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பும் இருந்தது. 1932ஆம் ஆண்டு கடந்த ஒலிம்பிக் பந்தயத்தில், ஜப்பானுக்கு எதிராக இந்தியா விளையாடி 11-1 என்ற வெற்றி எண்கள் (Goal) கணக்கில் வென்றது. அதேபோல், அமெரிக்கா நாட்டுடன் ஆடியபோது பெற்ற வெற்றி எண்கள் 24-1. அதில் தயான் சக்த் 8, ரூப்சிங் 10, குர்மிட்சிங் 5, பின்னிகர் 1. நமது நாட்டு வீரர்கள் ஆடிய விளையாட்டின் திறமையையும் தேர்ச்சியையும் பார்த்த அமெரிக்க காட்டுப் பத்திரிக்கைகள் எழுதிய விதமோ இன்னும் சிறப்பாக அமைந்திருந்தது.