பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 விளையாட்டு அமுதம் இரண்டு நாடுகளுக்கிடையேயும் போட்டி சமமாக நடக்கவேண்டுமானல், இந்திய காட்டு வீரர்களை இடது. கையால் மட்டுமே ஆடச்செய்ய வேண்டும் அல்லது அவர்கள் பனியில் சறுக்கி ஓடுகின்ற காலனிகளை அணிந்து ஆடச்செய்ய வேண்டும் என்பதுதான் அவர்கள் பத்திரிக்கைகளில் எழுதியவை. 'இடது கையால் மட்டுமே ஆடினுல்போதும் வென்றிட என்னும் நிலையில் மேலோங்கியிருந்த இந்தியர்கள் நிலை, இன்று இரண்டு கைகளால் ஆடினுல் போதாது, இராவணன்போல 20 கைகளும் இருந்தால் தான் முடியும் என்ற நிலையிலல்லவா இருக்கிருேம்? எங்கள் தாத்தா கலெக்டர் என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் என்ன பயன்? இப்பொழுது நாம் எங்கே இருக்கிருேம் என்று எண்ணி எண்ணிப் பார்த்து ஏதாவது செய்தால்தான், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று நினைக்கிருேம். ஆனல் என்றுமே நடைமுறையில் வரமாட்டேன் என்கிறது. எதைச் செய்யவேண்டும் என்று இப்பொழுதே தீர்மானித்தால்தானே வருகிற எண்பதிலாவது புகழ் பெறமுடியும்? உடற்பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது: அந்த அற்புதக் காட்சியைக் கண்டுகொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவரை, ஒல்லியான ஆனல் சுறுசுறுப் பாக் இயங்குகின்ற ஒரு சிறுவனின் செயல்கள் கவர்க் திழுக்கின்றன.