26 விளையாட்டு அமுதம் மான்ட்ரியல் ஒலிம்பிக்கில் 15ம் வயதில் தங்கப்பதக் கத்தை வென்றிடும் வண்ணம் சாதனை செய்திட துணை புரிந்திருக்கின்ருர், இளமையிலே பயிற்சி தந்தால், வளமான பயனைப் பெறலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிருர்கள் யாஷ்சிங்கோவும் மரியாவும். இதோ ஒரு புதிய க மைதாங்கி ! அடுக்கடுக்காக வரும் வேலைகள்... அவற்றைத் தொடர்ந்து வரும் பிரச்சினைகள்.ஓயாத சிந்தனைகள்உடல் களைத்துப் போகும் முயற்சிகள். இவை மனிதர் களுக்கே உரித்தான மாருத சுமைகள். அதிலும், நாடாளும் தலைவர்களுக்கோ சொல்லவே தேவை. யில்லை. அவ்வளவு கவலைகள். அழுத்தும் சுமைகளிலிருந்து விடுதலை பெற விரட்டும் பிரச்சினைகளிலிருந்து விடுபட, சில உலகப் புகழ் பெற்றத் தலைவர்கள் சிறந்த யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கின்றனர். அந்த யுக்தி யானது விவேகத்திலிருந்து பிறந்த யுக்தியாகும். அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர், தனது ஒயா பணிகளின் சுமையிலிருந்து விடுபட, வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு டென்னிஸ் ஆட்டம் ஆடி வருகிருர். வெள்ளை மாளிகைக்குள்ளே தனது தொல்லைகளைத் துரத்தி அடிக்கும் வண்ணம் வி2ளயாடி வருகிருர் என்பது இனிய செய்தியாகும்.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/19
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை