எஸ். நவராஜ் செல்லையா 27 ஜிம்மி காட்டருக்கு முன்னே ஜனதிபதியாகஇருந்த ஃபோர்டு அவர்கள், கோல்ஃப் எனும் ஆட்டத்தில் சிறந்த ஆர்வம் உள்ளவர். அவர் கோல்ஃப் ஆடி சுமை க2ளக் குறைத்துக் கொண்டார். அடிமைத் தளையறுத்த ஆபிரகாம் லிங்கன் எனும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தளப் பந்தாட்டம்’ (BASE BALL) ஆடி, சுவை தேடிக் கொண்டவர். இதற்கும் முன்னே இருந்தவர்களான ஜார்ஜ் வாஷிங்டன், இங்கிலாந்து முன்னுள் பிரதமர் உட்ரோ வில்சன் போன்றவர்கள் சதுரங்கம் (CHESS) ஆடி சந்தோஷம் அடைந்திருக்கின்றனர். - வே8லப் பளு மிகுந்தவர்கள், வேறு எந்த எந்த வழிகளிலோ வடிகால் தேடி, வேதனையை மிகுதிப் படுத்திக்கொள்கின்ருர்கள். ஆல்ை, விளை யாட்டோ வேதனை தராமல், வேதனையைக் குறைக் கிறது. விருப்பமான திருப்பத்தையே வழங்குகிறது. சுவைக்கு சுவை. சுகத்திற்கு சுகம். உடலுக்கோ கலத்திற்கு நலம். ஏன் விளையாட்டை எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது? நமக்குக் கிடைத்திருக்கும் நல்ல சுமை தாங்கியான விளையாட்டுக்களின் மேல் நம் பாரத்தை இறக்கிவைத்து இன்பம் அடையலாம். இனியாவது நாம் பயன்படுத்திக் கொள்வோமே!
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/20
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை