28 விளையாட்டு அமுதம் ரோமாபுரியில் பஞ்சபாண்டவர்கள்! ரோமாபுரியில் பஞ்சபாண்டவர்களா? ஆச்சரியப்பட வேண்டாம்! மகாபாரதக் கதையின் முக்கியமான கட்டம் சூதாட்டம்தான். தருமரை சூதாட அழைத்து, வஞ்சக மாகச் சூதாடவைத்து, காடு நகரத்தை மட்டும் கவர்ந்து கொள்ளவில்லை சகுனி. பாஞ்சாலியையும் பணயப் பொருளாக வென்று அடிமைப்படுத்தி, அவமானம் செய்து, பஞ்சபாண்டவர்களை காட்டை விட்டு ஒட்டிய கதை நமக்கெல்லாம் நன்கு தெரியும். ரோமாபுரிக்கு பஞ்சபாண்டவர்கள் எப்படிப் போனுர்கள் என்று நினைக்கிறீர்களா? ஏறத்தாழ 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்னே ரோமாபுரியில், ஏகப்பட்ட தருமர்கள் இருந்திருக்கிருர்கள். ஏறத்தாழ பாஞ்சாலிகளும் கிறைய பேர் இருந்திருக்கிருர்கள் என்ருல் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? சூதாட்டத்தில் அதிக வெறியுள்ள மக்கள் கிறைய பேர் அங்கே இருந்திருக்கிருர்கள் போலும். விடுவதும் அல்லாமல், அடுத்த வாரம் சம்பாதிக்கப் போகின்ற சம்பளத்தையும் முன்பாகவே பந்தயம் கட்டி தோற்றிருக்கின்ருர்கள். அதிலும் தோற்ற பிறகு, தோற்று இழந்த பொருட் களை மீட்டுவிடலாம் என்ற தன்னம்பிக்கையில், தாங்கள்
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/21
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை