30 விளையாட்டு அமுதம் அவனுக்கு சிலை வைத்ததைப் பொறுக்காத, அவனிடம் தோற்ற ஒரு குத்துச் சண்டைக்காரன், ஒரு நாள் இரவு யாரும் அறியாதவண்ணம் சிலே அருகே சென்ருன். யாரும் பார்க்கவில்லை என்று அறிக் ததும், தன் திட்டப்படி அந்தச் சிலையை உடைத்தெறிந்துவிட வேண்டும் என்று முயன்ருன். தனது ஆத்திரம் தீர அந்த சிலையை சாட்டையால் அடித்தான். அவனது கெட்ட காலமோ என்னவோ, அந்தச் சி2ல அசைந்து அவன் மேல் விழ, அவன் அங்கேயே நசுங்கி இறந்து போனன். மறுநாள் காலை, சிலைக்குக் கீழே ஒருவன் இறந்து கிடந்த சேதி அரசுக்கு எட்டியது. எந்த உயிராவது மடிந்துபோகக் காரணமாக இருந்த வர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பது அரசாங்கச் சட்டம். ஆகவே, கொலையைச் செய்த வருக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் என்று முடிவாயிற்று. கொலையைச் செய்தவன் உயிரோடு இல்லையே! சிலையாக அல்லவோ நிற்கிருன். ஆகவே, சிலைக்குத் தண்டனை தரவேண்டும் என்று தீர்ப்பு வழங்கி விட்டார்கள். சிலைக்கு என்ன தண்டனை தந்தார்கள் தெரியுமோ! அந்தத் தியாகனஸ் சிலையைத்துாக்கி ஒரு கப்பலில் வைத்து நடுக் கடலில் கொண்டுபோய் போட்டுவிட வேண்டும் என்பதுதான் தண்டனையும். செத்தவன் சிலையாகி, சிலையாக இருந்தே ஒருயிரைக் கொன்ருன் என்று நம்பி தீர்ப்பு வழங்கி, தண்டனையை கிறைவேற்றி யிருக்கிருர்கள் பார்த்தீர்களா! அதி மேதைகள்தான் அவர்கள்!
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/23
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை