பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 33 யானது உறையிலிருந்து கழன்று, கத்தி முனையானது எதிராட்டக்காரரின் உடலில் பாய்ந்து படுகாயப் படுத்திவிட்டது. எதிர்பாராத விபத்துதான். வேண்டுமென்றே செய்யாத செயல்தான் என்ருலும், படுகாயப்படுத்தி விட்ட காரியத்திற்காக வில்லியம் மனமுடைந்து போனர். தனது மேல் நிலை குருவான போப் ஆண்டவ ரிடம் சென்று மன்னிப்பு கோரினர். கோரிக்கை ைஏற்றுக்கொண்ட எலி (Ely) எனும் பகுதியைச் சேர்ந்த கோயில் அதிகாரிகள், ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வந்தார்கள். கோயிலைச் சேர்ந்த ஒரு சில குருக்கள், முரட்டுத்தனமாக ஆடி வருகின்ருர்கள். ஆகவே, அவர்கள் எல்லாம் இனி கால் பந்தாட்டம் விளையாட வேண்டாம் என்று ஓர் சட்டத்தைப் பிறப் பித்துக் கட்டுப்படுத்தி விட்டார்கள். அன்றிலிருந்து, மத குருக்கள் கால் பந்தாட்டத்தை மறக்கவேண்டியது மல்லாமல், துறக்க வேண்டியதும் ஆயிற்று. அவர்கள் தொடர்ந்து ஆடியிருந்தால், ஒருவேளை கால் பந்தாட்டம் இன்னும் மக்களிடையே அதிகமாக பிரபலமாகியிருக்கலாம் அல்லவா! தோற்றது யோங்கள் ! ஒரு மைல் துாரம் அல்லது அதற்கு மேற்பட்ட துாரங்களில் பந்தயம் நடைபெறுகிறபொழுது முதல் ஒட்டக்காரன் ஓடிவந்து முடித்த பிறகும்கூட ஒரு சிலர்