* 34 விளையாட்டு அமுதம் அதிக நேரம் ஓடி, கடைசியாக வந்து முடிப்பது உண்டு. அதை பார்வையாளர்கள் மிக சுவாரஸ்யமாகக் கேலி செய்து சிரித்து மகிழ்வதுமுண்டு. ஒரு மைலுக்கே இந்த ஆமை ஒட்டம் என்ருல், நீண்ட தூரம் என்ருல்? கிரேக்கப் பந்தயம் ஒன்றில் நீண்ட தூரப் போட்டி ஒன்றில் மிக மெதுவாக ஒடும் லூசிலஸ்’ என்பவன் பங்கு பெற்றன். முதலாவதாக ஓடி வந்து வெற்றி பெற்ற வீரன், அதிகாரிகள் பார்வையாளர்கள் எல்லாம் நிகழ்ச்சி முடிந்து(இரவாகிவிட்டதால்) சென்று விட்டார்களாம். லூசிலஸ் மட்டும் மெதுவாக ஒடிக் கொண்டிருந்ததை யாரும் அந்த உற்சாகத்தில் கவனிக்கவில்லை. ஒலிம்பிக் மைதானத்தைக் காக்கும் காவலர்களும் மைதானக் கதவைப் பூட்டிவிட்டு வீட்டுக்குப் போய் விட்டனராம். விடியற்காலையில் வந்து காவலர்கள் கதவைத் திறந்து பார்த்தபொழுது, அந்த லூசிலஸ் இன்னும் ஒடிக் கொண்டிருந் தானும், ஒட்டப் பந்த யத்தை முடிக்க. இரவோடு இரவாக அந்த லூசிலஸ் ஓடியதைப் பார்த்து. இவன் என்ன லூசாக இருப்பானே என்று பேசிச் சிரித்திருந்தாலும் ஆச்சரியமில்லைதான். கொண்டி ஆடு வந்தால்தான் பட்டியை சாத்த முடியும் என்பது கிராமத்தில் வழங்கும் பழமொழி. கொண்டி ஆட்டைவிட வேகமாக அல்லவா ஒடியிருக் கிருன் இந்த லூசிலஸ். எல்லாக் காலத்திலும் எல்லா பார்கள் போலும்! __
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/27
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை