எஸ். நவராஜ் செல்லையா 39. கிரிக்கெட் தந்த திர்ப் பு பிஜித்தீவு என் ருெரு காடு. அங்கே கிரிக்கெட் ஆட்டத்தை ஆடத்தொடங்கிய காலம். அப்பொழுது இரண்டு கிராமத்து மக்களிடையே தகராறு ஏற்பட்டு விட்டது. கிராமத்தார்களைப் பிளவுபடுத்துகின்ற பிணக்கைத் தீர்த்துக்கொள்ள, அந்தக் கிராமத்துப் பெரியவர்கள் ஒரு முடிவினை எடுத்தனர். அதாவது, கிரிக்கெட் போட்டியில் இரண்டு கிர ாமத்தினரும் கலந்து கொள்ளவேண்டும். அதில் வெற்றி பெறுபவர் பக்கமே சாதகமாகத் தீர்ப்பு அமையும் என்று கிரிக்கெட் ஆட்டத்திடம் தீர்ப்பைச் சுமத்திவிட்டு ஆட்டத்தைத் தொடங்கினர். ஒரு குழுவிற்கு 50 பேர் என்று அமைத்துக் கொண்டு ஆட்டத்தைத் தொடங்கினர். ஒரு குழு அடித் தாடத் தொடங்கியபோது, இன்னுெரு தடுத்தாடும் குழுவில் சிலர் விக்கெட்டைச் சுற்றி கின்று கொண்டனர். இன்னும் சிலர் மரங்களில் ஏறிக் கொண்டும், வீட்டுக் கூரையின் மீது ஏறிகின்றும் பந்தைத் தடுத்தாடினர்கள். இப்படி ஆடி, ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு ஓட்டம் (Run) மட்டுமே எடுத்தது. ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமமாக முடிந்ததால், இருவரும் சமா தானமாகப் போய்விட்டார்கள். கிரிக்கெட் ஆட்டம் சமாதானத்தைத் தந்து சமாளித்துக்கொண்டது.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/32
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை