எஸ். நவராஜ் செல்லேயா 4. கழன்றுபோய் விடுகின்றன. கலகலத்துப்போன பற்கள் அனைத்தும், அவன் வாய்க்குள்ளே சலசலத்துப் போய் இருக்கின்றன. ஈரிடாமஸ் என்ன செய்தான் தெரியுமா? ஒரே குத்தில் கொட்டிப்போன தன் பற்களை வெளியே துப்பி விட்டால் எதிரிக்கு اقاتی (تکت ஏளனமாகப்போய்விடும். அதல்ை இன்னும் அவன் துணிவுகொண்டு வலிமை யாகத் தாக்குவான் என்று கினைத்துக்கொண்டான். இதனை அவன் தனக்குள்ளே மைேதத்துவ அடிப்படை யில் முடிவு செய்தான். அதற்குப்பின் ஒரே வழி தான் இருந்தது. வாயிலிருந்த பற்களை எவ்வாறு வெளியே துப்பமுடியாதோ அதேபோல, வாய்க்குள்ளேயும் வைத்திருப்பது சங்கடமாகவே இருந்ததாம். பிறகு என்ன? அத்தனை பற்களையும் பால்பாயசம்போல் விழுங்கிவிட்டு, சண்டைபோட்டு, ஜெயித்தானும். இப்படி ஒரு நிகழ்ச்சி பழைய ஒலிம்பிக் பந்தயத்தில் நடந்தது என்று கிரேக்க வரலாற்ருசிரியர்கள் எழுதி இருக்கின்றர்கள். அந்த வீரனின் மனவலிமைதான் என்னே? சதை போட்டால் சாட்டையடி! நம் நாட்டில் இப்படி ஒரு சட்டம் போட்டால் என்ன ஆகும்? தொடர்ந்து சவுக்கடி சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருக்கும்! ஒரு நாட்டில் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தால் எப்படி அங்கு நடந்திருக்கும் என்று எண்ணிப் பார்த் வி. அ.-3
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/34
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை