எஸ். நவராஜ் செல்லையா 43 யத்தில் கலந்து கொண்டார். முதலாவதாக வந்த வரைவிட 5 கெச துாரம் பின்னல் ஓடி வந்து, இரண் டாவது இடத்தை அவர் பெற்றுவிடுகிறர். அவருக்கு வெள்ளிப் பதக்கம் பரிசாகக் கிடைக்கிறது. அவர் பெயர் நார்மன் பிரிட்சர்ட். கல்கத் தாவில் பிறந்தவர். பரிசுப் பெற்றதற்குப் பிறகு அவர் இங்கிலாந்தில் போய் குடியேறிவிட்டார். ஒட்டப் பந்தயங்களில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ஒரே இந்தியர் இவர் தான். 1924ம் ஆண்டு வரை, டென்னிஸ் ஆட்டமும், ஒலிம்பிக் பந்தயத்தில் போட்டி ஆட்டமாக இருந்து வந்தது. அதில் இந்திய ஆட்டக்காரரான முகமது சலிம் என்பவர் இறுதிப் போட்டி ஆட்டம் வரை வந்து வின்சென்ட் ரிச்சர்ட் என்ற அமெரிக்கரிடம், கடுமையான போட்டிககுப் பிறகு தோல்வியடைந்தார். அவருக்குக் கிடைத்தது வெள்ளிப் பதக்கம் தான். அதற்குப் பிறகு, டென்னிஸ் ஆட்டம் ஒலிம்பிக் பந்தயத்திலிருந்தே நீக்கப்பட்டுவிட்டது. புதிய ஒலிம்பிக் பந்தயம் 1896ம் ஆண்டுதான் தொடங்கியது. 1924க்குள் இருமுறை வெள்ளிப் பதக் தங்கள் நமக்கு கிடைத்தன. பிறகு ஏனே தெரியவில்லை அஜாயாட்டு வானில் வெள்ளி முளைத்த பிறகும், தங்க மயமாக இந்தியாவிற்கு விடியவில்லையே! ஒட்டப் பந்தயங்களில் எதிர்பார்க்கிருேம். வெள்ளி முளைத்தது. இன்னும் விடியவில்லையே!
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை