46 விளையாட்டு அமுதம் களுக்கு முதலில் வணக்கம் தெரிவிக்கின்றனர். பிறகு கடுவரை நோக்கிக் குனிந்து பணிவாக வணக்கம் செலுத்துகின்றனர். போட்டி தொடங்கி ஆட்டமும் முடிந்துவிடுகிறது. மீண்டும் குழுவினர் ஒன்றுகூடி, நடுவரை நோக்கி அன்புடன் வணக்கம் செலுத்துகின்றனர். நடுவரது முடிவு நியாயமானதே என்று ஏற்றுக்கொள்வதற்காக வும், அவரது அரிய பணிக்கு நன்றி கூறுவதற்காகவும் அவர்கள் மீண்டும் வணங்குகின்றனர். பிறகுதான், வென்ற தோற்ற குழுவினர்கள் தங்கள் வாழ்த் தொலியை முழங்குகின்றனர். ஜப்பான், சீனு போன்ற நாடுகளிலிருந்து வரும் குழுவினர் இதுபோல் வணங்கி, விளையாட்டுத் துறையில், ஒரு புதிய சகாப்தத்தையே உண்டு. பண்ணுகின்ருர்கள். அண்மையில் பாண்டிச்சேரியில் நடந்த கைப் பந்தாட்டப் போட்டிகளில் ஆந்திராவிலிருந்து வந்த ஆண்கள், பெண்கள் அணியினரும் மேற்கூறியது போல் வணங்கினர்கள். மேல் காட்டினரைப் பார்த்து எப்படி எப்படியோ எதை எதையே பின்பற்றும் நாம், இந்தப் பண்பாடு மிக்கப் பழக்கத்தை இனியாவது தொடர்ந்து பின் பற்றலாமே!
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை