எஸ். நவராஜ் செல்லையா 49 வாங்க வந்தோம் என்ற வியாபாரிகளைப் பார்த்த வண்ணம் வலதுகை எச்சில் கையாக இருந்ததால், இடது கையிலே கொஞ்சம் எள்ளே அள்ளிக்கொண்டு வந்து, இடது கையாலே எள்ளைப் பிசைந்து எண்ணெய் எடுத்துக் காட்டி, எங்களது எள் நல்ல எள் என்று வியாபாரம் பேசினுளாம். கணவன் இரண்டு கைகளில் எள்ளே வைத்துப் பிசைந்து எண்ணெய் எடுத்தான். மனைவியோ இடது கையிலே மட்டும் வைத்துப் பிசைந்து எண்ணெய் எடுத்தாள். கணவனைவிட மனைவியின் ஆற்றலைக் கண்டு வியந்து போனர்களாம் அவர்கள் என்பது ஒரு கதை. பண்டைய தமிழகத்தின் வலிமையை விளக்க வந்த கர்ணபரம்பரைக் கதையாகக்கூட இருக்கலாம். நமக்கு ஆச்சரியம் என்னவென்ருல், இடது கையால் எள்ளைப் பிசைந்த பலமே. 1926ஆம் ஆண்டு, ஜெர்மனியில் உள்ள சந்த்வீன எனும் பெண்மணி, 127 கிலோ கிராம் எடையை தலைக்கு மேலே துாக்கி உயர்த்தி இதுவரை எந்தப் பெண்ணும் துாக்கிட முடியாத ஒரு உலக சாதனையை நிகழ்த்தினுள். அந்த எடையானது அதிகக் கனமுள்ள பல டைப்ரெட்டர்களின் எடைக்குச் சமமானதாகும். தோளிலே தொங்கும் பையை பத்தடிக்கு ஒருமுறை இரு தோள்களிலே மாற்றிப் மாற்றிப் போகும் பெண் மணிகளையும் நாம் பார்க்கிருேம்! காலம் எப்படி மாறிக் கொண்டு வருகிறது பார்த்தீர்களா?
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/42
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை