52 * விளையாட்டு அமுதம் குழந்தையிலே தவழ்வதை நான்கு கால் என்றும், கிமிர்ந்து நடக்கும் வாலிப உருவத்தை இரண்டு கால் என்றும், வயதாகி விட்டால், துணைக்குத் தடியுடன் நடப்பதை மூன்றுகால் என்றும் கூறுகின்ருர்கள். '92 வயதாகி விட்டது, உடல் எவ்வளவு துாரம் தளர்ந்து போயிருக்கும் என்று கற்பனை செய்து பாருங் கள்! முதுகு வளைந்து போயிருக்கும், கால்கள் தள் ளாடிப் போயிருக்கும்' என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை. கிமிர்ந்த தோற்றம்தான். நெஞ்சுயர்த்தி நடக்கும் ஆற்றல்தான். ஆமாம், 100 மீட்டர் துரத்தை ஒடி 21.7 விடிைகளுக்குள் முடித்து வெற்றி பெற்று, வேடிக்கை பார்த்த மக்களை பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிருர் ஒருவர். அந்த வயது நிறைந்த வாலிபர் லண்டன் மாநகரைச் சேர்ந்த டங்கன் மெக்லீன் என்பவர். அவரே இந்த 77ஆம் ஆண்டிலே, இருமுறை 100 மீட்டர் துரத்தை 16:2 விடிைகளுக்குள் ஒடிபெரிய சாதனையையே செய்திருக்கிருர். இரண்டு பக்கத்திற்கு இரண்டு ஆள் என்று நடக்கத் துணை தேடும் பருவத்தில், நமது மாணவர்களும் வாலி பர்களும், 100 மீட்டர் துரத்தைஓடிமுடிக்கும்.அதேநேரத் திற்குள் ஒடுகிருர் என்ருல் அந்த வாலிபக் கிழவர் நமக் கெல்லாம் வழிகாட்டுகிருர் என்று தானே அர்த்தம்! பத்திரமாக பராமரித்தால், பாதுகாத்து வந்தால், தேகம் எந்த வயதிலும் தெம்பாக இருக்கும் என்பதைத் தானே அவரது சாதனை நமக்கு அறிவுரை கூறுகிறது. இந்த உத்தம சோதனைக்கு ஆட்படும் இளைஞர்களே, உயர்ந்த உன்னத வாழ்வை வாழ முடியும். கிழட்டு வாலிபர்களாக வாழ்பவர்க்கு வாலிபக் கிழவராக வழி காட்டுகிருர் வாழ்க டங்கன்மெக்லீன்!
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/45
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை