S4 விளையாட்டு அமுதம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள் எஜமானர்கள். ஆகவே, ஒருகுழுவினர் சிவப்பு வண்ண உடையையும், மறு குழுவினர் பச்சை வண்ண உடையையும் அணிந்து கொண்டு ஆடினர்.எசமானர்கள் வேலைக்காரர்கள் என்ற பேதம் தெரிந்து கொள்ளப்போய், அதுவே இரண்டு குழுக்களையும் தனித்தனியாகக் குறித்துக் காட்டும் வண்ணச் சீருடையாக வளர்ந்துவிட்டது. இத்தாலி நாட்டிலுள்ள பிளோரன்ஸ் நகரத்தில் தான் இந்த வண்ணச் சீருடை நிகழ்ச்சி முதன்முதலாக ஏற்பட்டது. இந்த முறையைப் பின்பற்றி பிரான்ஸ் நாட்டு அரசனை இரண்டம் ஹென்றி, கால் பந்தாட்டம் ஆடினதாக வரலாறு கூறுகிறது. 16ஆம் நூற்ருண்டில் இக் நிகழ்ச்சி நடைபெற்றது. கால் பந்தாட்டக் குழுவிற்குக் குழுத்தலைவனுக விளங்கிய இரண்டாம் ஹென்றி, தன் குழுவிற்கு சிவப்பு வண்ணச் சீருடையை யும், எதிர்க் குழுவிற்கு வெள்ளைச் சட்டையையும் கொடுத்து ஆடியதாகவும் வரலாறு கூறுகிறது. விளையாட்டா! கொக்கா!! விளையாட்டுதானே என்று கேலியாகப் பேசு பவர்கள் நிறைய பேர் உண்டு. அதிலென்ன அப்படி இருக்கிறது? இதற்கு ஒரு திறமை வேண்டுமா? என்று எதிர்வாதம் புரியும் விதண்டாவாதக்காரர்கள் இன்று கூடநாடு நிறைய உண்டு.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/47
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை