60 விளையாட்டு அமுதம் பெற்றது மட்டுமல்ல...புதிய உலக சாதனையையும் ஏற்படுத்தினர். நம் ஒட்டக்காரர்களைப் போல, ஒடி முடித்ததும் கீழே விழுந்து புரளவில்லை. மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி மல்லாந்து படுக்கவில்லை. ஒடி முடித்த பிறகும் பல தடைகளைத் தாண்டிக் கொண்டு ஓடினர். அவருக்கு வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அவரை யறியாமல் அங்கு மிங்கும் ஓடினர். என்ன ஞாபகம் வந்ததோ தெரியவில்லை, புகைப்படம் எடுப்பவர்களை நோக்கி ஓடினர். என்ஐன போட்டோ எடுத்தீர்களா? என்று பரிதாப மாகக் கேட்டாராம். என்னை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றும் கேட்டுக் கொண்டாராம். இதை வேடிக்கையாக ரசித்தார்களாம் புகைப்பட நிபுணர்கள். - இந்த அகிபுவா, ஏழைக் குடும்பத்தவர். முயற்சி யால் முன்னுக்கு வந்தவர். ஆகவே, எங்கே தன்னை மறந்து விடுவார்களோ என்று கினைத்தாரோ என்னவோ, அதனுல்தான் அப்படிக் கேட்டார்போலும். அவர் குடும்பத்திற்கு முன்னுல் குசேலர் குடும்பம் மிக மிகச் சிறியது. அதாவது குசேலர் குடும்பத்தில் குழந்தைகள் 27 தான். ஆல்ை அகிபுவாவுக்கு 43 சகோதர சகோதரிகள். குசேலரையே தோற்கடித்த குடும்பத்தில் பிறந்த இவர், பிறரைத் தோற்கடித்தது ஆச்சரியமா என்ன !
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/53
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை