*66 விளையாட்டு அமுதம் செய்து பார்த்திருக்கிருர்கள். அவர்கள் சோதனை ஒரு உண்மையை புலப்படுத்தியது. பாணி இந்தியன் எனும் பிரிவைச் சேர்ந்த காட்டு வாசிகளில் ஒருவனை அழைத்து 1மைல் துாரத்தை ஒடச் சொல்லியிருக்கிருர்கள். அவன் ஓடிய நேரத்தை, கடிகாரம் மூலம் கணக்கெடுத்துப் பார்த்தபோது, அவர்கள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஒடிய நேரமோ உலக சாதனையையும் மிஞ்சிவிட்டது. அதாவது ஓடி முடித்த நேரம் 3 கிமிடம் 58 விடிைகள். 4 கிமிடத்திற்குள் 1மைல் துரத்தை யாராலும் ஓடி முடிக்க முடியாது என்று நாகரிக உலகின் நல்ல ஒட்டக்காரர்களைப் பற்றி விளையாட்டுத் துறையாளர் களும் பயிற்சியாளர்களும் பேசிக் கொண்டிருந்த காலத்திற்கு முன்னமேயே இப்படி ஒரு அற்புத சாதனையை நிகழ்த் தியிருக்கிருன் காட்டுவாசி ஒருவன் . கூ-டா-வீ-காட்ஸ்-ஊ-லீ கூ-லா-ஷார் (KOOTAH-WE-COTS-OO-LEE-E-HOO-LA-SHAR). Luufhgi விடாதீர்கள். மந்திரவாதி பயப்படுத்தும் வார்த்தை களல்ல இவை. ஒடிய சிவப்பிந்தியனின் பெயர்தான். 1876ம் ஆண்டு அவன் ஒடி முடித்த நேரத்தை உலகப் புகழ்பெற்ற ஒட்ட வீரர்கள் 1954ம் ஆண்டு தான் ஓடமுடிந்தது. எப்படி இருக்கிறது அந்தக் காட்டுமிராண்டி ஒட்டம்!!
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/59
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை