பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 67 இப்படி ஒரு சண்டை! இரவு 9-15மணிக்கு ஆரம்பித்து, விடியற்காலை -4-34 மணிக்கு முடிந்தது. அது கூத்தாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா ! இல்லை. குத்துச் சண்டை தான். உலகத்திலேயே அதிசயமான குத்துச் சண்டை தான். 110 ரவுண்டுகள் மாறி மாறிக் குத்திக் கொண்டனர். ஏறத்தாழ 7 மணி 19 நிமிடங்கள் வரை சண்டை போட்டனர். இதில் யார் ஜெயித்தார் என்ருல் யாருமே இல்லை. வெற்றி தோல்வி இல்லை என்று முடிவு செய்து விட்டார்கள். வெற்றி தோல்வி இல்லாமல் ஒரு சண்டையா என்ருல் சண்டை போடுபவர்கள் சண்டை போட்டால் தானே நடக்கும்? ஏழு மணி நேரம் முகத்தில் குத்திக் கொண்டும், குத்துகளை வாங்கிக் கொண்டும் இருந்த இரண்டு விரர்களும், கடைசி நேரத்தில் கைகளைத் துாக்க முடியாமல் போகும் அளவுக்குக் களைத்துவிட்டனர். அப்புறம் எப்படி சண்டை தொடரும்? 1893ம் ஆண்டு, நியூ ஆர்லியன் என்னும் இடத்தில் கடைபெற்ற இக் குத்துச் சண்டை போட்டியில், ஆண்டிபவன்-ஜேக்பர்க் எனும் வீரர்கள் பங்குபெற்றனர். வெற்றி பெற முடியாவிட்டாலும், வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டனர். உலகத்திலேயே நீண்ட நேரம் நடந்த குத்துச் சண்டை என்பதுதான் இந்த சாத இன.