63 விளையாட்டு அமுதம்: ஒளி வெள்ளத்தில் கால்பந்தாட்டம் ! காலையிலும் மாலையிலும் விளையாட்டு என்று பாடியது அந்தக் காலம். அதற்குப்பிறகு, வெயில் ஏறத். தொடங்கும்போது விளையாட்டைத் தொடங்கி, வெம்மை குறைந்து மறையும் மாலையில் விளையாட்டை முடித்து விடுகின்ற கிரிக்கெட் ஆட்டம்ப்ோல, நாள் முழுதும் ஆடுகின்ற ஆட்டமும் இடையிலே வந்தது. அதிலும் இருட்டியபிறகு செயற்கையாக சிந்துகின்ற ஒளி வெள்ளத்தில் (Flood Lit) ஆடுகின்ற ஆட்ட முறை தற்போது அதிகமாகவே வளர்ந்திருக்கிறது. மேசைப் பந்தாட்டம் எப்பொழுதும் விளக்கொளி யில்தான் ஆடப்படுகிறது. அதைப்போலவே, கூடைப் பந்தாட்டமும் கைப் பந்தாட்டமும் இரவு வெளிச்சத்தில் ஏற்பாடு செய்து ஆடப்பெற்றன. அதற்குப் பிறகு, கால்பந்தாட்டம் கூட மிகவும் அதிகமான மின்சார செலவில், ஒளி வெள்ளத்தில் ஆடப்பட்டுவருகிறது. இவ்வாறு கால் பந்தாட்டத்தை ஒளி வெள்ளத்தில் ஆடுகின்ற முதல் முயற்சி இங்கிலாந்தில் நடந்தது. 1878ம் ஆண்டு, நவம்பர் மாதம் 16ந் தேதி, ஒரு கால் பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட குழுக்கள் வாண்டரர்ஸ் (Wanderers) குழுவும். கிளேகம் ரோவர்ஸ் (Claham Rovers) குழுவும். நான்கு விளக்குகள் உயரத்தில் பொருத்தப்பட்டி ருந்தன. இரண்டு விளக்குகள் டைனமோ மின்சார சாதனங்களால் உண்டாக்கப்பட்ட மின்சாரத்தாலும், மீதி இரண்டு விளக்குகளும் பேட்டரிகளால் உண்டாக்
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/61
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை