எஸ். நவராஜ் செல்லையா 69 கப்பட்டு ஒளியூட்டின. இருந்தாலும். அவை உமிழந்த ஒளியானது போதிய அளவு இல்லை. விளக்குகள் அசைந்ததால், வரும் பந்தின் காட்சியும் தெளிவாகத் தெரியாததால் அந்த சோதனை ஆட்டம் அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை. இருந்தாலும், முதல் முறையாக ஒளிவெள்ளத்தில் கால் பந்தாட்டப் போட்டியை நடத்தி, புகழ்பெற்ற இங்கிலாந்து காட்டில் இருந்த வாண்டரர்ஸ் குழு பாராட்டுக்குரியதாகும். விளையாட்டில் வயதா பெரிது ? விளையாட்டில் வயதுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமே. இல்லை. மேசைப் பந்தாட்டப் போட்டியில் ஜமாய்கா நாட்டு ஒற்றையர் இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்ற போது, ஜாய்ஃபாஸ்டர் என்பவருக்கு 8 வயது தான். டிரேசி ஆஸ்டின் என்ற அமெரிக்கப் பெண் தனது 9ஆம் வயதில் தனது முதலாவது டென்னிஸ் பட்டத்தை நம் நாட்டில் எட்டடி வைக்கின்ற வயது அல்லவா இவை? 1920ம் ஆண்டு ஆன்ட்வெர்ப் என்ற இடத்தில் கடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில் துப்பாக்கி சுடும் போட்டியில், வெள்ளிப்பதக்கம் பெற்ருர் ஸ்வீடன் காட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர். அவர் பெயர் ஆஸ்கார் ஸ்வாகன் என்பதாகும்.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/62
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை