70 விளையாட்டு அமுதம் அப்பொழுது அவருக்கு வயது என்ன தெரியுமா? 72வயது. முப்பது வயதிலேயே எல்லாம் முடிந்து விட்டது. என்று பேசி இன்பம் காணுகின்ற நம்மவர்கள் இதனை கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டும். மனம் உண்டானல் மார்க்கமும் உண்டு. அது வெறும் பழமொழி அல்ல. வாழ்க்கைக்கேற்ற இனிய மொழிதான். குருவி விடி ஓட்டம் ! ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள இறுதியாக இருவர் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர்களாக அன்று விளங்கினர். ஒருவன் பெயர் இடாஸ். இவன் பிசா என்னும் நகரைச் சேர்ந்தவன். ஏற்கனவே ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரன். மற்ருெரு வீரன் பார்த்தினுேபாஸ். அர்கேடியா எனும் நகரைச் சேர்ந்தவன், இவனும் சிறந்த ஒட்ட வீரன். காற்றினும் கடுகிச் செல்பவன். ஒட்டக்காரர்கள் ஒடத் தொடங்கும் கோட்டின் முன்னே வந்து கிற்கின்றனர். கூட்டம் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆவலில் அலை ததும்பி நிற்கிறது.ஒட்டம் தொடங்கிவிட்டது. காற்றை விட் வேகமாக ஓடுபவன் என்று பெயர் பெற்ற பார்த்தினுேபாஸ் வேகமாக முன்னுல் ஓடிவிடுகிருன். அவன் பின்னே இடாஸ் வந்து கொண்டிருக்கிருன். தான் தோற்றுப்போவோம் என்று இட ாசுக்குப் புரிந்து, போகவே, தந்திரம் ஒன்றை செய்கிருன்.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/63
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை