எஸ். நவராஜ் செல்லையா 71; பார்த்தினுேபாஸ், சாமிக்காக வேண்டிக் கொண்டு. தலை முடி வளர்த்திருப்பதால் தலையில் நீண்ட முடி வைத்திருந்தான். வேகமாக ஓடும்போது அவன் கற்றை முடி பரப்பி விழுந்து பரந்து கிடந்தது. அதைப் பார்த்ததும் இடாசுக்கு அற்புத யோசனை பிறந்து, விட்டது. இதோ! கோட்டைக் கடந்து முடித்து வெற்றி பெறப் போகிருன் பார்த்தினுேபாஸ் என்ற நிஐலயில், இடாஸ் எட்டி பார்த்திைேபாசின் குடுமியைப் பிடித்து இழுத்தான். குடுமியைக் கொடுத்த வீரன் தலைகுப்புற, வீழ்ந்தான். இழுத்தவனே முதலாவதாக ஓடி முடித்து. விட்டான். இடாஸ் ஆதரவாளர்கள், இடாசே வெற்றி பெற்ருன் என்று கரகோஷம் எழுப்பிக் கூத்தாடினர். ஒலிம்பிக் அதிகாரிகளும் இது தவறல்ல என்று முடிவு. கட்டி, இடாசே வெற்றி பெற்ருன் என்றும் அறிவித்து விட்டனர். அதைத் தவறு என்று யாரும் கூறவும் இல்லை. மீறவும் இல்லை. கீழே விழுந்த பார்த்தினுேபாஸ், தான் தோற்றதை அறிந்தான். அதிகாரிகளும் எதிரிக்கு சாதகமாக இருப்பதையும் உணர்ந்தான். அவனுக்கு அழுகை தாங்க முடியவில்லை. கண்ணிர் மாலை மாலையாகக் கொட்டுகிறது. கையிலே புழுதியை அள்ளித் தலை யிலே போட்டுக் கொண்டு, முகத்திலும் மார்பிலும் தேய்த்துக் கொள்கிருன். இரத்தம் கசிகிறது. அவன் வேதனையோடும் அழும்குரல் அனைவரையும் வேதனைக்கு, ஆளாக்குகிறது. இரக்கத்தில் ஆழ்த்துகிறது.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/64
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை