பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T2 விளையாட்டு அமுதம் இதைக் கண்ட முதிய அதிகாரி ஒருவர் அட்ராஸ்டஸ் என்பவர் திரும்பவும் ஒட்டப் பந்தயம் கடத்திட வேண்டும் என்று முடிவு கூற, பந்தயம் திரும்பவும் நடத்த பார்த்தினுேபாஸ் வெற்றி பெறு கிருன். இப்படி ஒரு நிகழ்ச்சி. கடுமையான விதிகள் இருந்த காலத்திலேயே குடுமி பிடித்து இழுத்து வெற்றி பெற முயல்பவன் ஒருவன். அவனுக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கும் அதிகாரிகள் இருந்திருக்கிருர்கள் என்று அறியும் போது, நமக்கு வியப்பாக அல்லவா இருக்கிறது! எந்த காட்டில் பிறந்தாலும் மனிதன் மனிதன்தான் என்றுதானே கினைக்கத் தோன்றுகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னே, முதலாம் நூற்ருண்டில் கிரேக்க காட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில், ஒட்டப் பந்தய நிகழ்ச்சி ஒன்றில் கடந்ததை ஸ்டேஷியஸ் என்ற கவிஞர் இவ்வாறு வருணித்திருக்கின்ருர். அதில் ஒரு காட்சிதான் இது. டென்னிசுக்காக உயிரைக் கொடுத்த ஆருகள் பந்தை அடித்தாடிட ஆரம்ப காலத்தில், உள்ளங் கைகளைப் பயன்படுத்தினர்கள். வேகமாக அடிக்கும் பொழுது கை வலியெடுக்கிறது என்பதற்காக கையில் உறை (Giove) மாட்டிக் கொண்டு அடித்தாடினர்கள். அதற்குப் பிறகு நீன்ட குச்சியில் உள்ளங்கை அகலத் தில் பரப்பளவை அமைத்துக் கொண்டு பந்தை அடித் தாடினர்கள். அதில் பந்து வேகமாகப் போகாததால்