76 விளையாட்டு அமுதம் ஆண்டு 27 அடிக்குமேல் தாண்டி உலக சாதனையை உண்டாக்கிய வீரன் ஜெசிஒவன்ஸ் எனும் அமெரிக்கன். ஏறத்தாழ 27 ஆண்டு காலம் அந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. அதுவே சிறந்த சாதனை என முடிவு செய்யப்பட்டது. 1968 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் R. பீமன் என்னும் அமெரிக்கன் தாண்டிப் பொறித்த சாதனை 29 அடி 23 அங்குலம். அதுவே இறுதியான சாதனை என்று எண்ணிக் கொண்டிருக் கிறது இன்றைய உலகம். ஆராய்ச்சியாளர்களும் வல்லுநர்களும் மேலும் இதைப்பற்றி ஆராயத் தொடங்கினர்கள். முடிவு! முயற்சிசெய்தால், நீங்களும் 36 அடி தாண்டலாம் என்பதுதான் அந்த முடிவு. எப்படி என்று கேட்கின் றிர்களா? இப்படித்தான். உலகத்திலேயே மிக விரைவாக 100 மீட்டர் ஓட்டம் ஆற்றலும், உலகத்திலேயே அதிக للاgاسه 5 35 مايوي உயரமாகத் தாண்டிக்கூடிய ஆற்றலும் உடைய ஒருவர் இந்த அற்புத சாதனையை ஆற்றிடமுடியும். ஆல்ை, அங்கே அவர்கள் ஆல்ை என்று ஒர் குறிப்பையும் அல்லவா கூறுகின்றர்கள். விரைவாக ஓடக்கூடிய அந்த வீரர் ஓடி வந்து இளத் தாண்டலில் முயற்சிக்கும்போது, வேகத்தைக் குறைத்திடக்கூடாது. அவ்வாறு குறைத்தால், உயரமாகச் செல்லுகின்ற ஆற்றலும் குறையும். பிறகு, குறித்த தூரத்தைத் தாண்டிட முடியாதல்லவா!
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/69
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை