86 விளையாட்டு ஆ. முதம் யிருக்கிருர். உயரத்தாண்டும் போட்டியில் உலக சாதனை இது. ஆறடி தாண்டினல் பெரிய வீரன்தான் என்ற பழ. மொழி கிலவி வந்தக் காலம் பறந்தோடிப்போய் விட்டது. விளாதிமிர் யாஷின்கோ எனும் ரஷ்ய இளைஞன்தான் இந்த அபார சாதனையை நிகழ்த்தி யிருக்கிருர். இதற்கு மேலும் இவர் தாண்டியிருக்கிருர். 235 மீட்டர் அதாவது 7 அடி 9 அங்குலம் வரை. ஆனல் அது உள்ளாடும் அரங்கத்தில் தாண்டியது என்பதால் உலக சாதனையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நாம் அண்ணுந்து பார்க்கிருேம். சீசீ இது புளிக்கும். என்று சொல்ல வாய் வரவில்லை. பேசியாவது மகிழ் வோம். செயல் வீரரைப் பாராட்டுவோம். வேறு என்ன தான் செய்வது? செய்ய முடியும்? ஆபரேஷன் என்ன செய்யும் ? அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பிரட் டைபோல்ட் எனும் கால்கேட் பல்கலைக்கழக மாணவன், 1942ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 21ந் தேதி,மேடிசன் ஸ்கொயர் கார்டன் எனுமிடத்தில் நடந்த 500 கெஜ ஒட்டப் போட்டியில் ஒரு பெரிய உலகசாதனையை நிகழ்த்தின்ை. 500 கெஜ தூரத்தை அவன் ஓடி முடித்த நேரம் 571 விடிைகள்.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/73
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை