பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 81: அவன் ஒடிய நேரத்தைப் பார்த்து வியக்கும் பொழுது, அவன் இருந்த நிலைமையையும் அறிந்தால் இன்னுமல்லவா வியப்பாக இருக்கிறது! இந்த உலக வெற்றி வீரனுக்கு 67 முறை காலில் ஆபரேஷன்கள் நடந்திருக்கின்றன. அதிலும் கடைசி முறையாக காலில் வளர்ந்த 15 அங்குல தசை நார்கள் வெட்டி எறியப்பட்ட ஆபரேஷன்தான் அது. அதற்குப்பிறகும் கால் தேறி, உள்ளம் கலங்காமல் ஒடி வெற்றி பெற்றிருக்கிருன் என்ருல், அந்த மனத். தின்மை நமக்கெல்லாம் வரவேண்டாமா! கிழக் சிங்கம்! நியூயார்க் நகரைச் சேர்ந்த நத்தானியேல் விக்கர்ஸ் என்பவர்தான் அந்தச் சிங்கம். கோல்ஃப் ஆட்டத்தில் அசகாய சூரர். 96 வயது வரையிலும் கோல்ஃப் போட்டி ஆட்டங் களில் பங்கு பெற்று பெரும் புகழ் எய்தியவர். ஒய்ந்த வயதிலாவது உட்கார்ந்து ஒய்வு பெற்ருரா? அதுதான் இல்லை. 103 வயது வந்த நாளில்கூட, வாரத்திற்கு மூன்று நாள் கோல்ஃப் ஆட்டம் ஆடி மகிழ்ந்திருக்கிருர். நாற்பது வயதில் நடக்கத் துணை கேட்கிருேம் ாாம். 100 வயதிற்கு மேலும் விளையாட்டில் உள்ள ஆர். வத்தைப் பார்த்தீர்களா? நடையாக நடந்து பல மைல் துாரம் ஆடவேண்டிய ஆட்டமாயிற்றே இது என்று கூட பாராமல், ஆடி மகிழ்ந்திருக்கிருர்.அவரது ஆர்வம் தான் என்னே? துே