86 விளையாட்டு அமுதம் உட்கார்ந்ததுமே மடமடவென்று விழுபவர்களைத்தான் பார்க்கிருேம். சிரிக்கிருேம். நமக்கு வேண்டியது. வேடிக்கைதானே! மெதுவாக சைக்கிள் ஒட்டும் பந்தயத்தை இனி" நடத்தவே வேண்டாம் என்று பந்தயம் கடத்தியவர்கள் தீர்மானித்து முடிவு எடுக்கக் கூடிய நிலைக்கு ஆளாக்கி விட்டார் ஒரு சைக்கிள் வீரர். 1965ம் ஆண்டு அப்படி ஒரு முடிவினை எடுக்கக் காரணமாக இருந்த அந்த விரரின் பெயர் சுகுைேபு மிட்சூவி (Tsugun obu. Mitsuishi). 39 வயதான டோக்கியோ நகரத்து, வீரர் என்ன செய்தார் தெரியுமா? மெதுவாக சைக்கிள் விடும் பந்தயத்தில், 45 மணி நேரம் 25 நிமிடங்கள் அசையாமல் நின்று கொண்டே யிருந்தார். அதனுல்தான் மெதுவாக ஒட்டும் சைக்கிள் பந்தயம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று "35σσfl6ήλ" எனும் புத்தகக் குறிப்பு ஒன்று கூறுகிறது. தலேவி பந்தாட்டம் ! \ 1961ம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் செஸ்டர் எனும் நகரின் அருகில் உள்ள கியூன்ஸ்பரி எனும் இடத்தில் காலின் ஜோன்ஸ் (Colin Jones) எனும் 15 வயது பையன், ஒரு அரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிருன். பந்து ஒன்றை உயரப் போட்டு தலையால் முட்டி அடித்தவாறு (Headine) 3412 முறை செய்திருக்கிருன். கீழே விழாமல் தலையால் பந்தை முட்டி முட்டி உயரே'
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/79
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை