90 விளையாட்டு அமுதம் போகின்ற ஒலிம்பிக் பந்தயத்தில், வெற்றி பெற்று விட்டால், 100 அடிமைப் பெண்களைக் கொண்டு வந்து உன் ஆலயத்தில் சேவை செய்ய விடுவேன்’ என்பது தான் அவனது பிரார்த்தனை. வெற்றி பெற்றபிறகு: வாக்குத் தவருமல், அப்படியே 100 பெண்களையும் அழைத்து வந்து சேவை செய்யவும் விட்டுவிட்டான். நமக்குத் தேங்காய் எளிதாகக் கிடைப்பதுபோல, அவனுக்கு மங்கைகள் நூறுபேர் எளிதாகக் கிடைத் திருக்கின்ருர்கள் பாருங்களேன்! இஷ்டப்படாத இட்லர்! ஜெர்மனியில் இட்லர் ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். உலகையே வென்று தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்து ஆளவேண்டும் என்று வெறி அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் வேளை, வீரமிக்கப் படைகள் வேண்டும் என்று வீரர்களைச் சேர்த்து முகாமிட்டுப் பயிற்சியளித்து வந்த நேரம். அவரது படையில் இந்தியர்களும் சேர்ந்து பயிற்சி பெற்றிருந் தார்களாம். இந்திய வீரர்களுக்கு ஒய்வு கிடைக்கும்பொழு தெல்லாம், சடுகுடு ஆட்டத்தை மிகவும் விரும்பி ஆடிக் களிப்பார்களாம். ஒரு நாள், அந்த வழியாகச் சென்ற இட்லர் அதனைப் பார்க்க நேர்ந்தது. அவனது மனம் அந்த ஆட்டத்தில் லயித்துப்போய் விட்டது. பாடிக் கொண்டே ஒருவன் எதிரிகள் இருக்குமிடத்திற்குச் சென்று, அவர்களை ஒரு கலக்குக் கலக்கிவிட்டு மீண்டு. வருவதும் அவர்களும் சளேக்காமல் பிடிப்பதும் போராடுவதும் போன்ற வீரச் செயல்கள் அவனை வியப்பில் ஆழ்த்தின.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/83
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை