பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 91. இந்த ஆட்டத்தைத் தன் காட்டு வீரர்கள் அனை வருக்கும் பயிற்சி கொடுத்துப் பழக்கிவிட்டால், வீரமும் விவேகமும் கொப்பளிக்குமே என்று திட்டமிட்டவய்ை, அருகிலிருந்த அதிகாரி ஒருவரை அழைத்து, அது எந்த நாட்டு ஆட்டம் என்று கேட்டானும். இந்தியா என்று பதில் வந்ததும், அவனது மனம் உடனே மாறிப்போய் விட்டதாம். அடிமைகளாய் வாழுகின்ற இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆட்டத்தைத் தம் மக்கள் ஆடுவதை அவன் விரும்ப வில்லையாம். எனவே, அந்த எண்ணத்தை உதறி விட்டு, ஏளனப் பார்வையை உதிர்த்துப்போய் விட்டானும். நன்மைகள் கிடைக்கக் கூடியதாக இருந்தாலும், அடிமை நாட்டு ஆட்டம் என்றதும் அவனது சுதந்திர வெறி தடுத்துவிட்டது என்று ஒரு சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது ஒரு செவிவழிச் செய்தி. இது எவ்வளவு தூரம் உண்மையோ நமக்குத் தெரியாது. பலரைக் கவர்ந்திழுக்கின்ற நம் சடுகுடு ஆட்டம், இன்னும் பல நாடுகளுக்கும் பரவாமலே இருக் கின்றது என்பது உண்மைதான். இட்லரை மயக்கிய இந்த ஆட்டம், அன்று அவன் ஏற்றுக் கொண்டிருந் தால், இன்று ஒலிம்பிக்கில் போட்டிக்குரியதாக அல்லவோ ஏற்றம் பெற்றிருக்கும்! இட்லர் இஷ்டப்படாதது நமக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் பார்த்தீர்களா! யோசனைத் திலகம் ! 1857ம் ஆண்டு, கியூபார்க் நகரத்தில் சதுரங்க (chess) ஆட்டப் போட்டி நடைபெற்றது. அது