எஸ். நவராஜ் செல்லையா 95 யார் முன்னல் வருவார் என்று ஓட விட்டுப் பார்த்தால், அந்தப் போட்டி மிகவும் கடுமையாக அமைந்து விடாதா? எதிலும் திறமை தானே வெல்லும். விரநெஞ்சம் ! மேசைப் பந்தாட்டப் போட்டியில் இரு வீரர்கள் கலந்து கொண்டனர். அது கால் இறுதிப் போட்டிக்கு (Quarter Finals) முன்னதாக ஆடக் கூடிய ஆட்டம். அதனல், மூன்று முறை ஆட்டங்களில் (Game) இரண்டு முறை வென்ருல் போதும் என்ற விதியுடன் ஆடப்பட வேண்டிய ஆட்டமாகும். ஆல்ை, அந்தப் போட்டியை நடுவர் நடத்திய விதமோ வேறு விதி முறையுடன் அமைந்துவிட்டது. அறிந்தோ அறியாமலோ, அந்தப் போட்டி 5 முறை ஆட்டங்கள் ஆட வேண்டியதாயிற்று. அதில் வென்ற வீரர் என்று போட்டிக்குப் பிறகு அறிவிக்கப் பட்டவர் H.P. ஜோஷி என்பவர். ஆல்ை, அதற்குப் பிறகுதான் தெரிய வந்தது-போட்டி நடத்தப்பட்ட விதம் தவருன விதி முறையுடன் என்று. மூன்று ஆட்டங்கள்'தான் ஆட வேண்டும் என்ற முறைப்படி பார்த்தால், தோல்வியடைந்துள்ள வீரர் அதாவது ஜோஷியை எதிர்த்தாடிய வீரர் ஹல்டார் என்பவர்தான் வெற்றி பெற்றவராவார். 5 ஆட்டங் கள்’ என்று பார்த்தால், ஜோஷி தான் வெற்றி பெற்ற வராவார். ஆகவே, தவறு நடுவரிடமிருந்து வந்திருக் கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, வெற்றி. தோல்வியை நிர்ணயிக்கின்ற இக்கட்டான கட்டத்துள் போட்டி நடத்தும் அதிகாரிகள் கின்று கொண்டிருந்த நேரத்தில், வென்ற வீரரிடமிருந்து ஓர் இனிய அறிவிப்பு எழுந்தது.
பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/88
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை