பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா

93

விளையாட்டுப் பந்தயங்களில் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்கள் பெற வேண்டும் என்ற வேகமும் நோக்கமும் என்றும் மாறாமலே இருந்தது. ஆரம் காலத்தில் நீச்சல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையால், ஆர்வமுடன் பயிற்சிகளைத் தொடங்கிய போது, அது வெற்றிகரமாக அமையவில்லை.

பிளாங்கர்சின் இயக்கங்களைக் கண்ட பயிற்சியாளர், ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டால், உறுதியாக வெற்றி பெற முடியும் என்று அறிவுரை கூறினார். அறிவுரையை ஏற்றுக்கொண்டு பயிற்சி செய்து, உயரத் தாண்டும் போட்டிக்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டு, 1936ம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்டாள்.

என்னதான் முயன்றாலும், அவளால் ஆறாவது இடத்தையே அடைய முடிந்தது. அதற்காக அவள் ஓய்ந்துபோய்விட வில்லை. கன்னியான பிளாங்கர்சின் முயற்சி, கன்னி முயற்சியாகவே போய்விட்டது. அதனால் கலங்கிப் போய்விடாமல், பயிற்சியைத் தொடர்ந்தாள் பிளாங்கர்ஸ்.

தொடர்ந்து பயிற்சி செய்த சாதனையானது, எந்தப் பந்தயத்திற்குச் சென்றாலும் இவளே வெற்றி வீராங்கனை என்னும் பட்டத்தைக் கொடுத்தது. உயரத் தாண்டும் போட்டி நீளத்தாண்டும் போட்டி இவற்றில் உலக சாதனைகளைப் பொறித்துவிட்டு, பந்தயத்திற்காகக் காத்திருந்தாள்.

ஆனால், அவள் நினைத்ததுபோல் தான் நடக்க வில்லை. 1936ம் ஆண்டுக்குப் பிறகு நான்காண்டுகள் கழித்து நடக்கவிருந்த ஒலிம்பிக் பந்தயம், 1940ம் ஆண்டு நடக்கவில்லை. இரண்டாவது மகா யுத்தம்