பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

100



நிகழ்ச்சிகளில் தொடங்கிய பெண்களுக்கான போட்டிகள், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளாக ஆக்ரமித்துக் கொண்டே வருகின்றன.

1976ம் ஆண்டு மான்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 13 விதமான போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்பட்டன. 1980ம் ஆண்டு நடைபெற்ற மாஸ்கோ ஒலிம்பிக் பந்தயத்தில் பெண்களுக்கான வளைகோல் பந்தாட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

அகில உலக ஒலிம்பிக் கமிட்டி ஒரு கணக்கெடுப்பில் ஈடுபட்டு, இதுவரை எத்தனை விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பந்தயங்களில் கலந்துகொண்டிருக்கின்றனர் என்பதைக் குறித்துக் காட்டியிருக்கிறது. அதன் விவரத்தைக் கீழே தருகிறோம்.

இதுவரை 18 முறை ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்று இருக்கின்றன. அவற்றில் 62,237 வீரர்களும் வீராங்கனைகளும் உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் வந்து பங்கேற்றிருக்கின்றனர்.

அதாவது பந்தயங்கள் 1972ம் ஆண்டு மியூனிக்கில் நடைபெற்றபொழுது, 121 நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 7147.

21வது பந்தயமாக 1976ம் ஆண்டு மான்ட்ரியலில் நடைபெற்றபொழுது 6189 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சுவையான அம்சம் என்னவென்றால், இந்த ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை 1274 ஆகும்.

மியூனிக் ஒலிம்பிக்கில் 1070 பெண்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம்,