பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



ஆளானார். வலது கையில் பாதி போனபிறகு, எப்படி கிரிக்கெட் விளையாடமுடியும்? கிரிக்கெட்ஆட்டத்தில் சிறந்த புகழ்பெற்றுத் திகழவேண்டும் என்ற லட்சியம் மட்டும் பாழாகவில்லையே! கிரிக்கெட்டே ஆடமுடியாது என்ற அவல நிலையல்லவா ஏற்பட்டு விட்டது!

வெற்றிவாகை சூடித்தரவேண்டிய வலதுகை போனதால், செஸ்டர் வாடி வருந்தி, வேதனையில் படுத்துவிடவில்லை. ``என்னுடைய பெயர் கிரிக்கெட் ஆட்டத்தில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதுதானே எனது இலட்சியம். விளையாடித்தான் புகழ்பெற வேண்டுமா என்ன? வேறு வழியிலும் புகழ்பெற முடியுமே” என்று வருந்திய அவரது உற்றார்க்கும் உறவினர்க்கும், நண்பர்களுக்கும்,நல்ல மனதுடன் ஆறுதல் சொல்ல வந்தவர்களுக்கும் செஸ்டர் பதில் கூறினார். பதட்டம் நீக்கினார்.

சொல்லிச் சொல்லி சுகம் கண்டு சோம்பித் திரியும் கூட்டத்தில் ஒருவராக செஸ்டர் விளங்கவில்லை. எல்லோரும் வாழ்த்தி வரவேற்கும்படியான நிலைமையில் பெயர்பெற்றுத் நிகழ்ந்தார்! எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா உங்களுக்கு!

1912ம் ஆண்டிலே அவர் கையிழந்தவராக ஆனார். அதன்பின், பத்தாண்டுகள் கிரிக்கெட் விதிகளையும். முறைகளையும், தவறு நேரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் கசடறக் கற்றார். ஆட்டத்தை பிழையற நடத்திக் கொடுக்கும் நடுவராகத் தேர்வு பெற்றார். ஆமாம்! ஆட்டக்காரரைவிட மிகவும் பொறுப்பு வாய்ந்த இடத்திலல்லவா இடம் பிடித்துக்கொண்டார்.

1922ம் ஆண்டு அவர் கிரிக்கெட் நடுவராகத் தன் பயியைத் தொடங்கினார். ஏறத்தாழ 1000 முதல் தர