பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

44



17. அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சி

'கிரிக்கெட் ஆட்டம் என்றால், ஏதோ மேயப்போகும் மாடு மெதுவாக அசைந்தசைந்து செல்வதுபோல, மிக மெதுவாக நடைபெறும் ஆட்டம். ஒருவர் பந்தை எறிய, மற்றொருவர் அடிக்க, பந்து போகும் திசையில் உள்ளவர் மட்டும்பரபரப்புடன் பந்தைப் பிடித்து எறிய, இவ்வாறு நாள்முழுவதும் நடைபெறும் ஆட்டம்' என்று வர்ணிப்பவர்கள் பலர் உண்டு.

'மிகவும் டல்லான ஆட்டம்’ மசமசவென்று எருமைமாட்டு மேலே மழை பெய்வது போல என்று ஏளனப்படுத்திப் பேசுவோரும் உண்டு. ஆனால் ஆயிரக்கணக்கானோர் நாள் கணக்காக ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு, உற்சாகமாகப் பார்த்து மகிழ்கின்றார்கள் என்றால், அதில் ஏதோ அற்புதமான கட்டம். ஆச்சரியமான சூட்சமம் என்னவோ இருக்கின்றது என்றுதானே அர்த்தம்!

சில சமயங்களில் வேகமாக முடிவு பெற்று விடுகின்ற ஆட்டமாகவும் அமையும். மற்றும் சில நேரங்களில் திகில் உண்டாக்குகின்ற, திரில் (Thill) ஏற்படுத்துகின்ற வகையாலும் ஆட்டம் உச்சகட்டத்தை அடைவதுமுண்டு.

எப்பொழுதாவது ஏற்படுமா என்றால், எப்பொழுதும் ஏற்படலாம் என்ற அளவில் ஏராளமான சுவையான நிகழ்ச்சிகள் கிரிக்கெட் வரலாற்றிலே இடம் பெற்றிருக் கின்றன. அவற்றில், அதிர்ச்சிதந்த ஒரு ஆட்டம் பற்றி இங்கே காண்போம்.

1882 ஆம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டிலே ஓவல் மைதானத்திலே நடந்ததுதான் அந்த அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி.