பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



81

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



32. அதிசயமான ஓட்டப்பந்தயம்

ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்றால் புனித ஆலிவ் மலர் வளையத்தை தலையில் கிரீடமாக சூட்டிப் பாராட்டினார்கள் பழங்கால கிரேக்கர்கள். பின்னர், வெற்றி வீரர்களுக்கு வெள்ளித் துண்டுகளைப் பரிசாக அளித்து கெளரவித்தனர் ரோமானியர்கள்.

அதன்பின், தங்கப்பதக்கங்கள் தரும் பழக்கம் ஓட்டப் போட்டியில் நுழைந்துகொண்டது. ஆனால் நாம் இங்கே காணப்படும் போட்டியோ அதிசயமான போட்டியாகும்.

ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டவர் இருவர்தான். அவர்கள் இருவரும் தங்கள் தங்கள் நாடுகளின் ஒரே பிரதிநிதியாகக் கலந்துகொண்டதுதான் இதில் சிறப்பான அம்சம் ஆகும். யார் வெற்றி பெற்றாலும் அது தனிப்பட்ட 'அவருக்கு' வருகின்ற பரிசு அல்ல. அது அவருடைய நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய மாபெரும் பரிசாகும்.

அந்த மாபெரும் பரிசு என்னவாக இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இது, உண்மையிலேயே பரம்பரை பரம்பரையாக, வழிவழி வம்சாவளியினர் வாழப்போகின்ற இடங்களை வாங்கித் தருகின்ற அதிசய ஓட்டப் போட்டியாகவும் அற்புதப் பரிசாக வாழும் தீவாகவும்தான் அது அமைந்திருந்தது.

இந்த சுவையான சம்பவம் 1648ம் ஆண்டிலே நடைபெற்றிருக்கிறது.

கரிபியின் கடல் பகுதியில் உள்ள ஒரு தீவு. அதற்கு செயின்ட் மார்ட்டின் என்பது பெயராகும். அங்கேதான் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றது.

இந்தத் தீவினை ஆக்ரமித்துக்கொள்ள இரண்டு நாட்டினர் வந்துவிட்டனர். ஒரு பகுதியினர் பிரெஞ்சு நாட்டினர். மற்ற பகுதியினர் டச்சுக்காரர்கள். அந்த தீவினை