பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

86


பெண் உடலாளர் (Women Athlete) என்பதாகத் தேர்ந்தெடுத்து அவருக்கு தொலைக்காட்சி (TV Set) ஒன்றைப் பரிசளித்தனர்.

தொலைக்காட்சி பெட்டியைத்தான் பரிசளித்தார்களே ஒழிய, அதற்குரிய உரிமத்தை (Licence) கொடுக்க மறந்து விட்டார்கள் விழாக் குழுவினர். தொலைக் காட்சிப் பெட்டியைத் தந்த நிறுவனமும் மறந்து விட்டது போலும்! தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கின்ற நேரத்தில், மலர்ப்படுக்கையில் முள் இருந்து உறுத்துவதுபோல, வீராங்கனையின் குடும்பத்தார்க்கு மனவேதனையை அளிக்க ஆரம்பித்தது அந்தப் பரிசுப் பொருள்.

உரிய லைசென்ஸ் இல்லாமல் தொலைக்காட்சிப் பெட்டியைப் பயன்படுத்துவது தவறு. தண்டிக்கப்பட வேண்டிய தவறுதான் என்பது எல்லோரும் அறிந்ததே! அதற்கான முயற்சியில் ஈடுபட்டார் அக்குடும்பத்தின் தலைவர் R.N. சட்ஷி. அதாவது விளையாட்டு வீராங்கனையின் தந்தையார்.

தொலைக்காட்சிப்பெட்டி தந்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டார். பலமுறை லைசென்ஸ் பெற முயற்சி எடுத்துப் பார்த்தார். மாதங்கள் பனிரெண்டு மறைந்தோடின. ஆனால் அவரது முயற்சியானது ஆரம்ப நிலையிலேயே நின்று போனதே தவிர, ஒரு சிறு பலனைக்கூடத் தரவில்லை.

அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு உரிய லைசென்ஸ் வாங்கலாம் என்றால், அதை வாங்கியதற்குரிய ரசீதும் இல்லை என்பதால், வைத்துக்கொள்ளவும் முடியாமல், வெளியே வீசி எறியவும் முடியாமல் தடுமாறித் தத்தளித்தார் என்பதாக