கடுமையான விதிகளை முன்னே வைத்து, கண்ணியத் துடனும் கட்டுப்பாட்டுடனும் ஒலிம்பிக் பந்தயங்களை கிரேக்கர்கள் நடத்தினர். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கீர்த்தி மிக்கவர்களாய் விளங்கிய கிரேக்கர் கள், உடல் அழகைப் போற்றினர்கள் உடல் ஆற்றலை ஏத்தினர்கள். வீரர்களை மதித்தார்கள். துதித்தார்கள்.
அத்தனைக்கும் மேலாக, வீரர்களை சிலையாக வடித்து சிறப்பித்தார்கள். தெய்வ அணுக்கிரகம் பெற்றவர்கள் என்று வணங்கினர்கள். காணிக்கை செலுத்தினர்கள். விளையாட்டுலகில் உடல் ஆற்றலால், ஆண்மைப் பெருக்கால் வெற்றி பெற்ற வீரர்களைப் பற்றி அவர்கள் வரலாற்றுக்கும் உண்மைக்கும் மேலே, கற்பனை மெரு கேற்றி ஒப்பற்றக் கதையாக, காவியமாக ஆக்கியும் விட்டார்கள்.
உண்மையானதுதான் ஒலிம்பிக் பந்தயங்கள் என்ற நம்பிக்கையில் நாம் இருக்கும் பொழுது, வீரர்களைப் பற்றிக் கூறும் வரலாருனது-மந்திர தந்திரக் கதைகள் நிறைந்ததாக வரும் பொழுது, எது உண்மை, எது பொய் என்று மயங்குகிருேம். தயங்குகிருேம். வீரர்களை நினைக்கும் பொழுது உணர்ச்சிப் ப்ெருக்கால் நாம் உந்தி எழுகின்ருேம். புராணம் போல அவை தோன்றும்போது, பொல பொலவென்று உதிரும் மலரிதழ்கள் போல, நினைவுகள் உதிர நிலை மாறு கின்ருேம்,
அரிய வீரர்கள் வரலாற்றிலே அப்படிப்பட்ட வீர நிகழ்ச்சிகள். அவர்கள் கதையிலிருந்து பொங்கியெழும்