பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


கற்பனை வளத்தைக் கண்டு நாமும் மகிழ்கின்றோம். காணற்கரிய வீரத்தின் எழுச்சியை ரசிக்கின்றோம். அவர்களும் சாதாரண மனிதர்கள் போல மக்களிடையே நடமாடி வாடும்போது, துடிக்கும்போது, நாமும் அவர் களுடன் வேதனையடைகின்ருேம். வாடித் துடிக் கின்ருேம்,

அதன் பின்னும், அவர்களின் வாழ்க்கைப் பாதை யைப் போல, நாமும் அமைத்துக் கொள்ள விரும்பு கிருேம். அவர்களிடமும் வேண்டாத, விரும்பத்தகாத சில குறைகள் இருக்கத்தான் இருக்கின்றன. அவற்றை விலக்கித் தள்ளிவிட்டால், அவர்கள் போற்றிக்காத்த உடல் வனப்பு நம் கண் முன்னே எழும். அவர்களின் ஆற்றலும் வலிமையும் ஆயிரமாயிரம் சிந்தனைகளை ஊட்டும். அவர்கள் மக்களிடம் பெற்றுவந்த மதிப்பும் மரியாதையும், ஏற்றிருந்த சீரும் சீறப்பும், உய்த்து வந்த பெருமையும் பூரிப்பும், நாமெல்லாம் இந்நாளி லும் பெற்றிட முடியும் என்ற பேருண்மையை பறை சாற்றும். நிறைவேற்றும்.

 உடல் வளம்காத்து உயர்ந்தவர்களின் வரலாற்றுக் கதைகளை தொகுத்து எடுத்துக் கூறியிருக்கிறேன். ஒலிம்பிக் பந்தய வீரர்களல்லவா உணர்ச்சிமிக்க சுவை யான நிகழ்ச்சிகள் தான் எல்லாம்.

கற்பவர்கள் மனதில் `உடல் வளமே உண்மை வளம்’ என்ற நெறி பரவ வேண்டும் என்று நீங்காத ஆசை யினல் எழுதப் பெற்ற, விளையாட்டு உலகில் வீரக் கதை களை இனி தொடர்ந்து நீங்கள் ரசிக்க இருக்கின்றீர்கள்.

சுவையான கதைகள்தான். முடிந்தவரை சுைைவயாகவே எழுதிச் சொல்ல முயன்று இருக்கிறேன். இனி நீங்கள் தொடரலாம்.