பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கிரேக்க நாடாகும். உடல் வலிமைக்கும், வனப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதனைமத விழாவாக,வீர விழாவாக நடத்தி வெற்றிகரமாக வாழ்த்தி நாடும் கிரேக்க நாடாகும்.

ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெறுவதற்காக உவப் புடன் முன் வந்த வீரர்களை, விழா நடத்தும், விழாக் குழுவினர் எத்தகைய கடுமையான விதி முறைகளுடன் வரவேற்றனர், வழிப்படுத்தினர், விளையாட அனுமதித் தனர், கொடுமையாகத் தண்டித்தனர் என்றெல்லாம் அறிகின்ற பொழுது, கிரேக்கர்கள் நடத்திய கீர்த்தி மிகு விழாவான ஒலிம்பிக் பந்தயங்களை, தங்கள் உயிரி னும் மேலாக நேசித்தனர் என்பதையே நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ள விரும்பு கின்ற வீரன் ஒருவன், கலப்பற்ற தூய கிரேக்களுக இருக்க வேண்டும் என்பது முதல் விதி.

அவன் திருமணம் ஆகாதவகை, எந்த குற்றவாளிப் பட்டியலிலும் இல்லாதவகை, இருக்கவேண்டும் என்பது அடுத்த விதி. அதிலும், அவன் பந்தயங்களில் கலந்து கொள்ள விரும்பி மனுச்செய்து கொண்ட பிறகு. கலே நாடிகை எனும் குழுவால் பரிசீலிக்கப்பட்டுத் தேர்ந் தெடுக்கப்பட்டான். பின்னரே ஒலிம்பிக் பந்தயங் களில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டான் என்றும் வரலாறு விரித்துரைக்கின்றது.

வெற்றி பெற்ற வீரன் ஒருவன் கிரேக்கத்திலேயே சிறந்த வீரனாகக் கருதப்பட்டான். அவனே வளர்த்து ஆளாக்கிய நாட்டில் அவன் ஒரு குட்டி தேவதை பெறு கின்ற அத்தனைச் சிறப்பினையும், வணக்கத்தையும்,